வரதன்
முதலில் ஜனாதிபதி தேர்தல் இதில் எமது ஒற்றுமையை காட்ட எங்களது மக்களுக்கும் மண்ணுக்கும் உதவி செய்யக்கூடிய ஜனாதிபதியை மக்கள் தெரிவு செய்ய வேண்டும் - இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேச மக்கள் ஒன்றுபட்டு செயலாற்றுவதன் மூலம் எதிர்காலத்தில் வரவுள்ள தேர்தல்களில் எங்களது மக்களுக்கும் மண்ணுக்கும் உதவி செய்யக்கூடிய ஜனாதிபதியை மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டும் முதலில் ஜனாதிபதி தேர்தல் அதன் பின்னர் பாராளுமன்ற தேர்தல் மாகாண சபை தேர்தல் இடம்பெற உள்ளன
இதில் எமது ஒற்றுமையை காட்ட வேண்டும் என
மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மண்டபத்தடி உள்வீதி புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்து பிரதம அதிதியாக கலந்து கொண்ட ராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்
உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் சுமார் 50 லட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட உள்ள வீதி நிகழ்வானது மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ் சபேசன் தலைமையில் இன்று இடம்பெற்றது
மண்முனை மேற்கு பிரதேச சபையின் செயலாளர் s.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரச உயர் அதிகாரிகள் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பு. பிரசாந்தன் பொதுமக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.