மினி வேன் சாரதியின் தூக்கத்தினால் அநியாயமாக பறிக்கப்பட்ட உயிர் .

 

 


செங்கலடி சேனைக்குடியிருப்பைச்சேர்ந்த இரு குழந்தைகளின் தந்தையான தோமஸ் டயஸ் (35) என்பவர் நேற்று  காலை (29/06) தொழில் நிமிர்த்தம் பெரிய புல்லுமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது, எதிரே வந்த மினி வேன் பாதை மாறி இவர் மேல் பலமாக மோதியதால் சம்பவ இடத்திலேயே இவர் மரணமானார்.

இரு வாகனங்களும் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளது. மினி வேனின் சாரதியின் தூக்கமே விபத்துக்கான காரணமென தெரிவிக்கப்படுகின்றது.

கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளையேற்று சம்பவ இடத்துக்குவ்சென்ற மரண விசாரணை அதிகாரி MSM. நஸீர் விசாரணைகளை முன்னெடுத்து பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை அனுப்பி வைத்தார்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம்  ஒப்படைக்கப்பட்டது.

மினி வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கரடியனாறு பொலிசார் மேலதிக விசாரணைகளை தொடர்கின்றனர்.