மட்டக்களப்பில் துவிச்சக்கரவண்டிப் பேரணி!










(கல்லடி செய்தியாளர்)

உலக துவிச்சக்கரவண்டி தினத்தை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை (02) மடடக்களப்பு கல்லடியில் துவிச்சக்கரவண்டிப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

இப்பேரணி கல்லடி சரவண வீதியில் அமைந்துள்ள ஜகப் பின் ஏற்பாட்டில் அதன் இணைப்பாளர் சுஜிராஜ் நடராசா தலைமையில் நடைபெற்றது.

இதன்போது போக்குவரத்துப் பொலிசார் வீதி ஒழுங்குகளைக் கவனித்ததுடன்,ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலாரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.