பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரம் தொடர்பிலான வழக்கின் தீர்ப்பு உயர்நீதிமன்றத்தால் சற்றுமுன்னர் வழங்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாயாக அதிகரித்து வழங்குமாறு வர்த்தமானி அறிவித்தல் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டிருந்தது. அந்த தொகையை வழங்கமுடியாது எனத் தெரிவித்துள்ள தோட்ட கம்பனிகள் சில, அந்த வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில், வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,தோட்டத்தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1,700 ரூபாய் சம்பளமாறு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானிக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்க முடியாது என உத்தரவிட்டுள்ளது.
வழக்கை, எதிர்வரும் 29ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு உத்தரவிட்டுள்ளது.