அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக உள்ளார்.

 


ஒக்ரோபர் 5 அல்லது 12 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான ஆசு மாரசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடத்தப்படும் என்று அமைச்சரவைக்கு ஜனாதிபதி தெரியப்படுத்திவிட்டார். இராஜாங்க அமைச்சர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போதும் இது பற்றி ஜனாதிபதி தெரியப்படுத்தினார். ஜனாதிபதி தேர்தலுக்கு பாதீட்டில் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பெரும்பாலும் சனிக்கிழமை நாளொன்றிலேயே தேர்தல் நடத்தப்படும். அந்தவகையில் ஒக்டோபர் 5 அல்லது 12 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும்.

அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக உள்ளார். இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை” என்றார்.