காணாமல் போன பெண் மற்றும் அவரது மகளை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவி நாடி பொலிஸார் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளனர்.
குறித்த அறிக்கையுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள பொலிஸார், அந்த பெண் மற்றும் அவரது மகள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கவும் என அறிவித்துள்ளனர்.
யசோதா ஹன்சனி கஹதுடுவஆராச்சி என்ற 26 வயதுடைய பெண்ணும் அவரது 04 வயது மகளும் இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கடந்த மே மாதம் 29 ஆம் திகதி முதல் தனது மனைவி மற்றும் மகள் காணாமல் போயுள்ளதாக அவரது கணவர் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்படி, குறித்த பெண் மற்றும் அவரது மகள் தொடர்பில் ஏதேனும் தகவல் இருப்பின் 071-859 1639 ( கட்டுநாயக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி) அல்லது 011-225 2222 (கட்டுநாயக்க பொலிஸ் நிலையம்) என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.