தோட்ட தொழிலாளர்களின் 1,700 ரூபாய் சம்பள விடயத்தில் நீதித்துறை வழங்கிய தீர்ப்புக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.
தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் இ.தொ.காவின்,மறைந்த தலைவர்களான சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் காலம் முதல் இன்றுவரை தொடர்ந்தும் போராட்டங்கள் ஊடாகவே சம்பள உயர்வை பெற்றுக் கொடுத்துள்ளது.
தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் இ.தொ.கா மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்களை இ.தொ.கா தவிடுபொடியாக்கியுள்ளது. நீதி துறையின் இச்செயற்பாடானது மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.