காத்தான்குடியை சேர்ந்த ஊடகவியலாளர் சஜீத் அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் கௌரவிப்பு.



வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஏற்பாட்டில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பங்குபற்றுதலுடன்  மட்டக்களப்பு கோல்டன் ரிவர் ஹோட்டலில் ஊடகவியலாளர்களை சந்தித்து இடம்பெற்ற கலந்துரையாடலின் போது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட முகவர் ஊடாக வெளிநாடு சென்று வெளிநாட்டில் பணிபுரிந்
து மீண்டும் தாயகம் திரும்பி வந்து எமது நாட்டில்  பலருக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து நல்லநிலையில் உள்ளவர்களின் வெற்றிக் கதையை சிறப்பாக தொகுத்து வழங்கிய சக்தி டீவியின் காத்தான்குடி பிராந்திய செய்தியாளர் எம்.எஸ். சஜீத்  தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் சிறந்த வீடியோ தொகுப்புக்கான பாராட்டும் கௌரவிப்பும் பரிசிலும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.