வரதன்
கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்ற பத்திரகாளி அம்பாள் ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு புன்னச்சோலை ஸ்ரீ ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் திருக்கதவு திறத்தல் நிகழ்வு நேற்று இரவு ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ யோகன் அய்யா தலைமையில் சிறப்பாக இடம் பெற்றது
எதிர்வரும் (05.06.2024) கன்னி கால் வெட்டுதல் நிகழ்வும் 07.06.2024 அன்று அதிகாலை தீக்குளி மூட்டுதல் நிகழ்வும் விநாயகர் பானை பொங்கல் வழிபாடு தீமிதிக்கும் அடியார்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்வும் இடம்பெற உள்ளத்துடன் அன்று மாலை 5 மணி அளவில் மட்டநகர் வாவியில் மஞ்சள் குளிக்கும் நிகழ்வின் பின்பு அடியார்களின் அரோகரா கோசத்திற்கு மத்தியில் ஆயிரக்கணக்கான அடியார்கள் தங்களின் வேட்டு வேண்டுதல்களை நிறைவேற்ற முகமாக தீப்பாய்தல் சடங்கு இடம்பெற உள்ளது
எதிர்வரும் 12-ம் தேதி தீக்குளிக்கு பால் ஊற்றுதல் மற்றும் வைரவர் சடங்கு என்பன இனிதே இடம் பெற உள்ளது ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ யோகன் அய்யா தலைமையில் வருடாந்த திருச்சடங்குகள் இடம் பெற உள்ளது நேற்றைய திருக்கதவு திறக்கும் நிகழ்வில் அதிக அளவிலான பக்த அடியார்கள் கலந்து கொண்டதுடன் தேவாதிகளுடன் பட்டெடுத்தல் வரும் நிகழும் இடம் பெற்றதன் பின் திருக்கதவு பூஜை இடம் பெற்றது.