இந்தியாவில் ஏழாவது கட்ட மக்களவைத் தேர்தல் முடிவடைந்ததையடுத்து வெளியான கருத்துக் கணிப்புகளில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியின் தலைவர்கள் இதற்கு எதிர்வினையாற்றியுள்ளனர்.
கடைசிக் கட்ட தேர்தல் பிரசாரம் முடிந்ததும், பிரதமர் நரேந்திர மோதி
கன்னியாகுமரிக்குச் சென்று சுமார் 45 மணிநேரம் தியானம் செய்தார். மூன்றாவது
பதவிக் காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் செயல்படுத்த வேண்டியவை
தொடர்பான '100 நாள் நிகழ்ச்சி நிரல்' கூட்டத்தை பிரதமர் (ஞாயிற்றுக்கிழமை)
நடத்தினார்.
பாஜக தனித்து 370 இடங்களிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களிலும்
வெற்றி பெறும் என்று பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா கூறினார்.
இதற்கிடையில், சனிக்கிழமை எதிர்க்கட்சிகள் கூடி எதிர்கால வியூகம் குறித்து
ஆலோசித்தன. இந்தியா கூட்டணி 295 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
கருத்துக் கணிப்புகள் குறித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “இது மோதி மீடியாக்களின் கருத்துக்கணிப்பு” என்று கூறியுள்ளார்.
இடங்களைப் பெறும் என்று ராகுல் காந்தி கூறினார்.