சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு உயிராபத்து ஏற்படுமுன் குறைபாட்டை சீர்செய்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை.




எஸ். சஜீத்

காத்தான்குடி, ஊர் வீதி (ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரி) முன்பாக வாவிக்கரை வீதிக்கு செல்லும் மரைக்கார் லேனில் கடந்த வருடம் வடிகான் புணரமைப்பு பணிகள் இடம்பெற்று அது பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் அதன்மேல் இடப்பட்டுள்ள மூடிகள் பல தடவைகள் சேதம் அடைந்ததை காணக் கூடியதாக உள்ளது.

இது அவ்வாறு இருக்க குறித்த வடிகான்  மூடியில் 16 வது இலக்கம் இடப்பட்ட மூடி கடந்த பல மாதங்களாக வடிகானின் கட்டுகளை விட்டு விலகி வடிகான் உள்பக்கம் சரிந்து காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

இந்த வீதி ஊடாக நாளாந்தம் பல வாகனங்கள் அடங்கலாக சிறுவர்கள் பெரியவர் என அதிகமானோர் பயன்படுத்தி வருவதுடன் இரவு நேரங்களில் குறித்த பகுதியில் வெளிச்சமின்றி இருளாக காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

இவ் வடிகான் சுமார் மூன்று அடி ஆழமுடையதாக காணப்படுவதுடன் இதனுள் சிறுவர்கள் பெரியவர்கள் தவறி விழும் பட்சத்தில் உயிர் ஆபத்துக்கள் ஏற்படும் அபாய நிலையும் காணப்படுகின்றது.

இதேவேளை சில நபர்கள் முறையற்ற விதத்தில் குறித்த பகுதியினூடாக குப்பைகளை வடிகானினுள் வீசிச் செல்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை உடனடியாக கவனத்திற் கொண்டு உயிராபத்து ஏற்படுமுன் 16ம் இலக்கமுடைய வடிகான் மேல் மூடியை சீர் செய்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.