திருகோணமலை நில அளவையாளர் அலுவலக ஊழியர் ஒருவர் , தனக்கு அநியாயமாக இடமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறி திங்கட்கிழமை (03) பிற்பகல் துறைமுக வீதியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
மேலும் , தனக்கான நீதி கிடைக்கும் வரை இப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்