Park & Ride சேவை அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் பாதுக்கை ரயில் நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 


இலங்கை ரயில்வே திணைக்களத்தினால் முதற்தடவையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள Park & Ride சேவை அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் பாதுக்கை ரயில் நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தமது அன்றாட பணிகளுக்கென ரயில் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள் தமது வாகனங்களை பாதுகாப்பான முறையில் ரயில் நிலைய வளாகத்தில் நிறுத்தி விட்டு ரயில் பயணத்தை மேற்கொள்ளும் வகையில் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த Park & Ride சேவை வாகன தரிப்பிடத்தில் சிறிய கட்டணம் அறவிடப்படுவதுடன் தமது வாகனங்களை எவ்வித அச்சமும் இன்றி பாதுகாப்பான முறையில் வைத்து விட்டு ரயில் பயணத்தை மேற்கொள்ள முடியுமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.