யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளரின் மதவெறிச் செயற்பட்டைக் கண்டித்தும் அவரைப் பதவி நீக்க வலியுறுத்தியும் யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று செவ்வாய்க்கிழமை (02) முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை சிவசேனை மற்றும் உருத்திர சேனை ஆகிய இரண்டு இந்து அமைப்புக்கள் இணைந்து யாழிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.