பதுளை - சொரணாதோட்டை வீதியில் லொறி விபத்துக்குள்ளானதில் 04 பேர் உயிரிழந்துள்ளனர் .

 


பதுளை - சொரணாதோட்டை வீதியின் வெலிஹிந்த பிரதேசத்தில் இன்று (05) மதியம் 12 மணியளவில் லொறியொன்று வீதியின் நடுவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.