2024ம் ஆண்டு ஜுன் மாதம் 30ம் திகதி நடைபெற்ற ஆசிய யோகாசன போட்டியில் மட்டக்களப்பு சக்தி ஆனந்தா யோகா பாடசாலை மாணவர்கள் ஆறு ( 6 ) தங்க பதக்கங்களையும் , இரண்டு ( 2 ) வெள்ளி பக்கத்தையும் , ஒரு ( 1 ) வெண்கல பதக்கத்தையும் வென்று மட்டு நகருக்கு பெருமை சேர்த்து உள்ளனர்.
இப் போட்டியானது சிவவிஷ்னு யோகா பீடம் இலங்கை , இந்திய தேசிய யோகாசன சம்மேளனம் , சர்வதேச யோகாசன பேரவை ஆகிய அமைப்புகளினால் ஒழுங்கு செய்யப்பட்டு 30.06.2024 அன்று கொழும்பு ஷீ ராம் கல்யாண மண்டபம், புதிய செட்டித் தெரு , கொழும்பில் நடைபெற்றது .
தங்க பதக்கம் வென்றவர்கள்
S.ஜெயஸ்ரீ _ 5 வயது
S.விகாஷிகா _10 வயது
P.நிஷா ஹரி _ 11 வயது
A.ஓவியா _ 12 வயது
P .கேஷி _14 வயது
N.ஷப்தமி _17 வயது
வெள்ளி பதக்கம் வென்றவர்கள்
K.கிரன் _ 5 வயது
R.அபிராம் _ 27 வயது
வெண்கல பதக்கம் வென்றவர்கள்
P.சர்வன்_8 வயது
இந்த நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்
மேற்படி மாணவர்களை சிறப்பான முறையில் பயிற்றுவித்த மட்டக்களப்பு சக்தி ஆனந்த யோகா பாடசாலை ஸ்தாபகர் சிவசக்தி சிவபாதசுந்தரம் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது .