தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக 12 இலட்சம் கடிதங்கள் மற்றும் பொதிகள் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

 



தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக மத்திய தபால் பரிவர்த்தனை மற்றும் ஏனைய தபால் நிலையங்களில் சுமார் 12 இலட்சம் கடிதங்கள் மற்றும் பொதிகள் தேங்கியுள்ளதாக தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

மத்திய தபால் பரிமாற்றத்தில் சுமார் 07 இலட்சம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தபால் பொருட்கள் சிக்கியுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.