இந்தியா,கேரளாவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகின்றது. தொடர்ச்சியாக நேற்று திங்கட்கிழமை இரவு பெய்த கன மழையின் காரணமாக அங்கு மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் சூரல்மலை பகுதியில் பயங்கரமான மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்தும் 4.30 மணிக்கு மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
அடுத்தடுத்த மண்சரிவினால் வெள்ளேரிமலை, மேப்பாடி, வைத்திரி உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு, பாலமொன்றும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 500 வீடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கிக் கொண்டனர்.
திடீரென ஏற்பட்ட இந்த பாரிய மண்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் மண்சரிவில் சிக்குண்டுள்ள மக்களை ஹெலிகெப்டர் மூலமாக மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், சிக்குண்டவர்களின் நிலைகுறித்து எந்தத் தகவலும் இல்லாததால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.