வரதன்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக 20 லட்சம் பேருக்கு உறுமைய காணி உரிமையை உறுதி பத்திரம் வேலைத்திட்டம் ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்
கிழக்கு மாகாணத்தில் அதிகப்படியான வேலை திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு எம்மிடம் உள்ளது.
இந்த நாடு மிகப்பெரிய ஆபத்தான நிலையில் இருந்த வேலையில் நாம் அவர்களை கைவிட்டு ஓடிவிட முடியாது ஒரு குறுகிய காலத்துக்குள்ளே எமது நாடு பொருளாதார ரீதியில் படிப்படியாக முன்னேற்றம் கண்டு வருகின்றது. மக்கள் தலைவர்கள் என்பவர் வெளிச்சத்தை ஏற்பவராக இருக்க வேண்டும்
இன்று ஜனாதிபதி தேர்தல் வர இருக்கின்றது. தினம் தினம் பல ஜனாதிபதி வேட்பாளர்கள் வந்து கொண்டே இருக்கின்றார்கள்
நாடு பற்றி எரிந்தபோது ஓடி ஒழிந்தவர்கள்
இன்று ஜனாதிபதி தேர்தல் என்றவுடன் நானும் ஜனாதிபதிதான் என்று கூவிக்கொண்டு இதில் பலர் இந்த நாடு பற்றி எரிந்தபோது,நாட்டு மக்கள் தவிர்த்தபோது வீட்டு மூலைக்குள் ஒழிந்திருந்தவர்களும் இந்த நாடு இன்னும் நூறு வருடத்திற்கு மேல் எழமுடியாது என்று அறிக்கை விட்டவர்களுமே இவர்களாகும்
நாம் இந்த நாட்டை நேசிப்பவர்களாக இருக்க வேண்டும் அப்போது நாட்டை பொறுப்பெடுத்த தலைவர் நாட்டை விட்டு ஓடவில்லை களத்தில் நின்று தான் மக்களுக்காக இறுதிவரை போராடினார் என
இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் இவ்வாறு கருத்தை தெரிவித்தார்