மட்டக்களப்பு கல்லடி உப்போடை , நொச்சிமுனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் வருடாந்த மகோற்சவம் -2024

 







 





 FREELANCER

 

 மட்டக்களப்பு கல்லடி உப்போடை, நொச்சிமுனையில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமானின் வருடாந்த மஹோற்சவம் 03.7.2024  புதன் கிழமை  இன்று நண்பகல் 12.00 மணிக்கு  கொடியேற்றத்துடன் ஆரம்பமானது .
07.07.2024 அன்று 4ம் குறிச்சி பொது மக்களின் மாம்பழத் திருவிழாவும்    ,5ம்  குறிச்சி பொது மக்களால்2024.07.08 அன்று   திருவிளக்குப் பூசையும்,     9.07.2024 அன்று முதலாம் குறிச்சி பொது மக்களால் வசந்த உற்சவமும்,    2024.07.10 அன்று 2ம் குறிச்சி பொதுமக்களால் திருவேட்டை திருவிழாவும் ,  11.07.2024அன்று  3 ம் குறிச்சி பொது மக்களால் தேரோட்ட நிகழ்வும் தீமிதிப்பு நிகழ்வும்  நிகழ்வும் இடம் பெற உள்ளது .   12.07.2024அன்று   காலை   9.00மணிக்கு தீர்தோற்சவம் இடம் பெற உள்ளது .
ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சின்னையா கிருபாகரன் குருக்கள் தலைமையில் மகோற்சவ திருவிழா நிகழ்வும் பூஜைகளும் இடம் பெறும்.

 சைவ அடியார்கள் அனைவரையும் மஹோற்ச திருவிழாவில் கலந்து கொண்டு விநாயக பெருமானின் திருவருளை பெற்றேகுமாறு ஆலய பரிபாலன சபையினர் அன்புடன் அழைக்கின்றனர் .