மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தின் கட்டணம் செலுத்தி வாழும் முதியோர் இல்லத் திறப்பு விழா -2024.07.02

 






























FREELANCER



மட்டக்களப்பு கல்லடி அரச விடுதி வீதியில்    இந்து இளைஞர் மன்றத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட  கட்டணம் செலுத்தி வாழும் முதியோர் இல்லம்   இன்று திறந்து வைக்கப்பட்டது .
முதியோர் இல்ல வளாகத்தில் அமைந்திருக்கும் விஸ்வநாதர் ஆலயத்தில் விசேட பூசை நிகழ்வுடன் விழா ஆரம்பமாகியது அதனை அடுத்து ஆரம்ப நிகழ்வாக
ஆன்மீக அதிதியாக வருகைதந்த  கல்லடி உப்போடை மட்டக்களப்பு கிளை இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி ஸ்ரீமத் நீலமாதவானந்தஜீ  மகராஜ் அவர்களினால் ஞாபகார்த்தக்கல் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து  விழாவுக்கு வருகைதந்த கௌரவ மற்றும் சிறப்பு விருந்தினர்களால் இல்லத்தின் அறைகள் திறந்து வைக்கப்பட்டன .
சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்ட  மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் v.வாசுதேவன் அவர்களால் இல்லத்தின் கடைத்தொகுதி  திறந்து வைக்கப்பட்டது .
அதிதிகளாக கலந்து கொண்ட அனைவரும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்கள்.
 இலங்கை இந்து மன்றம் பொது செயலாளர் ப .முருகதாஸ்  அவர்கள்  நன்றியுரை வழங்கினார் .  
இலங்கை இந்து மன்ற அங்கத்தவர்கள் , சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர் .