கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்கதும், சுயம்புலிங்கப்பிள்ளையார் என்ற பெருமையினையும் கொண்டதுமான மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார மகோற்சவம் 03.07.2024 இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது .ஆலய பிரதமகுரு சிவசிறி வி.கு.சிறிஸ்கந்தராஜா குருக்கள் தலைமையில் பூஜை நிகழ்வுகள் இடம்பெற உள்ளது .
இலங்கையில் மிகவும் பண்டைய ஆலயங்களுள் ஒன்றென்ற பெருமையினைக் கொண்ட களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார திருவிழா பத்து தினங்கள் நடைபெற்று எதிர்வரும் (12) வெள்ளிக்கிழமை மு.ப.9 மணிக்கு
ஆணி உத்தர நட்சத்திரத்தில் தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளது.
2024.07.03அன்று கிரியைகளுடன் ஆரம்பமாகி, கும்பபூஜை, யாகபூஜை விசேட அபிசேகம் என்பன நடை பெற உள்ளன
அதனைத்
தொடர்ந்து வசந்த மண்டபத்தில் சுயம்புலிங்கப்பிள்ளையார், சிவன், முருகப்
பெருமான் ஆகியோருக்கு விசேட பூஜைகள் நடைபெறுவதுடன் , உள்வீதி மற்றும்
வெளிவீதியுலாவும் இடம் பெற இருக்கின்றன
இந்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை 2024.07.012அன்று வெள்ளிக்கிழமை மு.ப. 9 மணிக்கு தீர்த்தோற்சவமும் அதனைத் தொடர்ந்து திருப்பொன்னூஞ்சலும் இடம்பெறும்.