FREELANCER
மட்டக்களப்பு கல்லடி - உப்போடை, நொச்சிமுனை அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய தேரோட்டம் இன்று காலை வேளையில் (2024.07.11) வியாழக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது வேத பாராயணங்கள் ஒலிக்க, தாளவாத்தியங்கள் முழங்க, பக்தர்களின் அரோகரா கோசங்கள் விண்ணை முட்ட, விநாயகப் பெருமானின் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, அழகு ரதம் ஆலய வெளி வீதியை வலம் வந்தார்.
இவ் அரிய காட்சியைக் காண மட்டக்களப்பு நகர் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் இருந்து பக்த அடியவர்கள் வருகை தந்திருந்தனர்.
இவ் ஆலய கொடியேற்றம் கடந்த (2024.07.03) அன்று புதன் கிழமை அன்று நண்பகல் 12.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது . அதனைத் தொடர்ந்து 09 தினங்கள் திருவிழா இடம்பெற்று, 10 ஆம் நாளான நாளை வெள்ளிக்கிழமை (2024.07.12) அதிகாலை தீமிதிப்பு இடம்பெற்று, தீர்த்தோற்சவத்துடன் ஆலய உற்சவம் நிறைவு பெறவுள்ளது.
ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சின்னையா கிருபாகரன் குருக்கள் தலைமையில் மகோற்சவ திருவிழா நிகழ்வும் பூஜைகளும் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது .