வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா- 2024












 
மட்டக்களப்பு மண்டூர்  ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா 2024.07.30.
நாளை செவ்வாய்க்கிழமை    கொடியேற்றத்துடன்   ஆரம்பமாக  உள்ளது .
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர்  திருவிழா தொடர்பான அறிவிப்பை வெளியிடப்பட்டதை தொடர்ந்து திருவிழா நாளை ஆரம்பமாக உள்ளது .


கதிர்காம ஆலயத்தின் பூஜை முறைகளுக்கு ஒப்பானதாக, கப்புகர்களினால் வாய்கட்டப்பட்டு திருவிழா நடைபெற உள்ளது .

  விநாயகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்று கொடி ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு, கொடியேற்றம் செய்யப்படவுள்ளது .

திருவிழாவில் விசேட பூஜைகள் இடம்பெற்று முருகப்பெருமானின் வெளி வீதி உலா நடைபெறும்.
 வருடாந்த திருவிழாவின் தீர்த்தோற்சவம் 2024.08.19ஆம் திகதி திங்கள் கிழமை   மண்டூர் மூங்கில் நதியும், மட்டக்களப்பு வாவிவும் சங்கமிக்கும் புண்ணிய தீர்த்தத்தில் தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளது.