தொழிற் சங்க சுகயீன விடுமுறை காரணமாக அரச சேவைகள் முடங்கி காணப்பட்டது.

 

 


 நாடளாவிய ரீதியில் இன்று (08) தொழிற் சங்க சுகயீன விடுமுறை காரணமாக அரச சேவைகள் முடங்கி காணப்பட்டதுடன் பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களையும் எதிர்நோக்கினர்.

திருகோணமலை மாவட்டத்திலும் அரச சேவைகள் முடங்கி காணப்பட்டு அரச சேவை ஸ்தம்பிதமடைந்துள்ளது வேதன அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 200க்கும் மேற்பட்ட தொழிற் சங்கங்கள் சுகயீன விடுமுறையை அறிவித்து பணிப் புறக்கணிப்பு செய்துள்ளனர்.