அரகலய போராட்டக்காரர்களின் மக்கள்பேரவைக்கான இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவான் பொபகே போட்டியிடுகிறார்

 


அரகலய போராட்டக்காரர்கள் இணைந்து உருவாக்கியுள்ள மக்கள்பேரவைக்கான இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவான் பொபகே போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தற்போதைய சிக்கலான அரசியல் சூழ்நிலையில் இலங்கை மக்களின் அபிலாஷைகளை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் பொது மக்களின் போராட்டத்தில் தனது வாழ்க்கையை நுவன் போபகே கூர்மைப்படுத்தியதாக  அரகலய அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.