மட்டக்களப்பு பாலமீன்மடு பிரதேச வைத்தியசாலைக்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.












2024ம் வருடத்துக்கான ஆரம்ப சுகாதார சிகிச்சை பிரிவுகளை தரப்படுத்தல் நிகழ்ச்சி நிரலின் கீழ்  தேசிய ரீதியில் மட்டக்களப்பு பாலமீன்மடு பிரதேச வைத்தியசாலைக்கு    இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.


இரண்டு  தேசிய விருதினை பெற்றுக்கொண்டதன் மூலம்  மட்டக்களப்பு  மாவட்டத்திற்கு  பெருமை தேடித்தந்த  பாலமீன்மடு பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் சிங்கராஜா இனியவன்  தலைமையிலான வைத்திய அதிகாரிகள்  உட்பட வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் இன்று பாலமீன்மடு பிரதேச வைத்தியசாலையில்   நினைவுச்சின்னங்கள் வழங்கி   கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில்  அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் பிரதேச பொது மக்கள்,     சமூக ஆர்வலர்கள்    என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்