தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது ஜனாதிபதி
நாட்டின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு ஜனாதிபதி இத்தேர்தலை நடத்தாமல் நீடிக்க முடியுமா என்று சிந்தித்து கொண்டிருக்கின்றார் தேர்தலை நடத்துவதற்கு பெருந்தொகையான நிதிகள் தேவைப்படும் நாட்டு மக்கள் தற்போது தான் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டு வருகின்றனர்
முன்னாள் ஜனாதிபதி கோட்டா இடத்தை நிரப்புவதற்கு இன்று ரெண்டு வருடங்கள் தேவைப்பட்ட இதனை கருத்தில் கொண்டு தான் ஜனாதிபதி கருதி இருப்பார் என நான் நினைக்கின்றேன் அவ்வாறாயினும் தேர்தல் வந்தால் அவர் வெல்லுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. இல்லாவிட்டாலும் நாட்டின் பொருளாதரத்தை வலுவடையச் செய்து அதன் பின் நாட்டை முன்னேற்றச் செய்ய முடியும்
எதிர்க்கட்சித் தலைவர் அவரிடம் தான் இந்த வாய்ப்பு முதலில் சென்றது. நாட்டின் நிலைமையை கண்டு அவர் அன்று பயந்துவிட்டார் இந்த நிலைமையை மாற்ற முடியும் என்றால் அவர் அன்று நாட்டை பாரம் எடுத்திருப்பார்.
ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை வளப்படுத்த. மீண்டும் வளப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் உடனடியாக பாரமெடுத்தார் சஜித்க்கு வாய்ப்புக்களும் குறைவு அவ்வாறான தகுதிகள் வாய்ப்புக்கள் தற்போதைய ஜனாதிபதிக்கு தான் உண்டு தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு அப்பால் நாட்டை கட்டி எழுப்பக் கூடிய தலைவருக்கே ஆதரவு வழங்கப்பட வேண்டும்
மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அதிகமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சிக்கு வாக்களிப்பவர்கள் ஆனால் மறைந்த சம்மந்தர் ஐயாவின் பூதடலை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கொண்டுவரவில்லை என இங்குள்ள மக்கள் வேதனையுடன் இருக்கின்றனர் அக்கட்சிக்கு அதிகம் வாக்களிக்காத தலைநகரில் அவரது பூதவுடல் அதிக நேரம் வைக்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு அம்பாறையில் அவரது பூத உடல் வைக்கப்பட்டு இருந்தால் நாங்கள் கூட சென்று அவருக்கான அஞ்சலியை செலுத்திருப்போம் ஏனென்றால் நானும் அவரை மதிக்கின்ற ஒரு தலைவன் பற்றாளன் என மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.