இலங்கை இராணுவத்தினரின் மனிதாபிமானச் செயற்பாடு.


 




 












(கல்லடி செய்தியாளர்)



கிழக்கு மாகாணத்தில் இலங்கை இராணுவத்தினரின் மனிதாபிமானச் செயற்பாடுகளில் ஒன்றான அங்க அவயங்கள்  இழந்தவர்களுக்கான  செயற்கைக்கால் வழங்கும் நிகழ்வு கிழக்கு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஷெவாந்த் குளதுங்க தலைமையில் வெலிக்கந்தை கலாசார மத்திய நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) இடம் பெற்றது.

கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஷெவாந்த் குளதுங்கவின் வழிகாட்டுதலின் கீழ் இப்பிரதேசங்களில் கால்களை இழத்தவர்களுக்கு செயற்கைக் கால்கள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது கால்களை  இழந்த 40 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கால்களின் அளவுகள் பெறப்பட்டு அவர்களுக்கான செயற்கை அவயங்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

தூரப் பிரதேசங்களில் உள்ளவர்களின் பாத அளவீடுகள் மேற்கொள்ளவதில் உள்ள சிரமத்தைக் கருத்திற் கொண்டு மேஜர் ஜெனரல் ஷெவாந்த் குளதுங்க இந்நடமாடும் சேவையை வழங்குவதற்குரிய  நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

கொழும்பு நட்புறவுச் சங்கத்தின் (Colombo friend - in - Need Society ) அனுசரனையில் ரொட்டரி கொழும்பு கபிட்டல் சிற்றி சிறிலங்கா  ( Rotary Capital City Sri Lanka)   நிறுவனத்தின் நிதிப் பங்களிப்பில்  பயனாளிகளுக்கான  செயற்கைக்  கால்களைக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஷெவாந்த் குளதுங்கவினால் வழங்கி வைக்கப்பட்டது.

இராணுவத்தினரினால் இன, மத பேதமின்றி அவயம் இழந்தவர்களுக்கு செயற்கை கால் வழங்கப்பட்டது.

 இந் நிகழ்வில் முன்னாள் போராளிகளுக்கும் செயற்கை கால்களை வழங்கியமை இராணுவத்தின் மனித நேயப் பண்பை  எடுத்துக் காட்டும் செயற்பாடாக  இருந்தது.

இந்நிகழ்வில் கேணல் பிரபாத், ரொட்டரி கழக தவிசாளர் ஹெமந்த அப்போன்சு, கபிட்டல் சிற்றி வைத்தியர் ரஜிஞ்ஜிவ் ராஜபக்ச, திட்ட முகாமையாளர் எஸ்.எம். பண்டார, பிரிகேடியர்கள், லெப்டினன்ட்  கேணல்  தம்மிகவிரசிங்க மற்றும் உயர் அதிகாரிகள், பயனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.