பெண் தொழிலாளர்கள் பணி புரியும் தும்பு தொழிற்சாலையில் தீ விபத்து

 


முல்லைத்தீவு (Mullaitivu) - விசுவமாடு வள்ளுவர்புரம் பகுதியில் அமைந்துள்ள தும்பு உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த தும்புத்தொழிற்சாலைக்கு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு வாகனங்கள் இரண்டு வரவழைக்கப்பட்டு தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வள்ளுவர்புரம் பகுதியில் பெண்களை கொண்ட சிறு கைத்தொழில் நிறுவனமாக இந்த கைத்தொழில் தும்புத் தொழிற்சாலை நிறுவனம் கடந்து 8 ஆண்டுகளாக இயங்கி வருகின்றது.12 பெண் தொழிலாளர்கள் இந்த தும்புத் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றார்கள்.
 12 லட்சம் பெறுமதியான தும்புகளுக்குள் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகவும் நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் குறித்த தும்பு தொழிற்சாலையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.