முதல் சுற்றில் நாங்கள் வெற்றிப் பெற்றோம், இரண்டாவது சுற்றில் அவர்கள் வெற்றிப்பெற்றார்கள் ,மூன்றாவது சுற்றில் நாங்கள் வெற்றிப் பெறுவோம் ஜீவன் தொண்டமான்

 

 

 


பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிக்கும் வகையில் தொழில் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர் நீதிமன்றம் இடைகால தடையுத்தரவு ஒன்றை இன்று பிறப்பித்தது.

பெருந்தோட்ட நிறுவனங்களினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட நிறுவனங்களினால் வர்த்தமானியை எதிர்த்து மேல் முறையீட்டு நீதிமன்றத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் கலந்துக்கொண்ட நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்டகட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் இது தொடர்பாக ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்..

 நீதிமன்றம் கூறியிருக்கின்றது ஒரு மாத காலப்பகுதிக்குள் இந்த பிரச்சினைகளை முடிவிற்கு கொண்டுவருவதாக.

நாங்கள் சொல்வதையே செய்வோம், கடந்த 2020ஆம் ஆண்டு கூறியது போல் 1000 ரூபாவினை பெற்றுக்கொடுத்தோம், தற்பொழுது ரூபா 1700 யை பெற்றுத்தருவதாக கூறியிருந்தோம் அதனையும் பெற்றுக்கொடுப்போம்.

எங்களை பொறுத்த வரையில் முதல் சுற்றில் நாங்கள் வெற்றிப் பெற்றோம், இரண்டாவது சுற்றில் அவர்கள் வெற்றிப்பெற்றார்கள் ஆகவேதான் மூன்றாவது சுற்றில் நாங்கள் வெற்றிப் பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.