கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக அநாமதேய தொலைபேசி அழைப்பு விடுத்த நபர் கைது

 


 கண்டி நீதிமன்ற   வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக அநாமதேய தொலைபேசி அழைப்பு  விடுத்த வட்டவளை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக  காவல்துறையினா்  தெரிவித்துள்ளனர்.

கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக  இன்று   காலை 10  மணியளவில்  காவல்துறை அவசர பிரிவுக்கு (119) தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து   உடனடியாக   நீதிமன்ற வளாகத்திற்க்கு சென்ற   இராணுவ வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரும் விசேட அதிரடிப்படையினரும்    அங்கிருந்த அனைவரையும் வெளியேற்றி தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனா். எனினும்   வெடிகுண்டு எவையும்  கண்டுப்பிடிக்கப்படவில்லை

இந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக  இன்று செவ்வாய்க்கிழமை (02) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த அனைத்து வழக்குகளும் ஜூலை 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.