இலங்கை வரலாற்றில் சினிமாத்துறையில் வரலாற்று சாதனையினை இரத்தினபுரி மாவட்டம் இறக்குவானை பகுதிக்கு பெற்றுத்தந்து தமது நிலையான நாமத்தினை நிலைநிறுத்தி எம்மை விட்டு பிரிந்துச்சென்ற அமரர் தர்ஷன் தர்மராஜின் நினைவாக இறக்குவானை பிரதேசத்தில் ( தர்ஷன் தர்மராஜ் மாவத்த) எனும் பெயரில் வீதி ஒன்றுக்கு பெயர் சூட்டப்பட்டது.
இலங்கை வரலாற்றில் தமிழர் ஒருவரின் பெயரில் பாதை ஒன்றுக்கு பெயர் சூட்டியமை இதுவே முதல்முறையாகும்.
குறித்த பாதைக்கு பெயர் சூட்டி அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை இன்று திறந்து வைத்தார்கள்.
நேற்று காலை ஒன்பது மணி அளவில் திறப்பு விழா நடைபெற்றதுடன், திறப்பு விழாவிற்கு ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளரும் ஜனாதிபதியின் இணைப்பு செயலாளருமான எஸ்.ஆனந்த குமார் கலந்து கொண்டிருந்தார்.
மேலும், கொடக்கெவல பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் பிரியந்த பண்டார, இறக்குவானை பரியோவான் தேசிய பாடசாலையின் அதிபர் மற்றும் மத தலைவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் தர்ஷன் தர்மராஜின் குடும்பத்தவர்களும் இதில் கலந்து கொண்டிருந்தார்கள்.