2024 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் உத்தேச மின் கட்டணத் திருத்தம் தொடர்பான
மக்களின் வாய்மூல கருத்துக் கோரல்கள் இன்று இடம்பெறவுள்ளதாக பொதுப்
பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்றி முற்பகல் 9 மணி முதல் பிற்பகல் 4.30 வரை பண்டாரநாயக்க மாநாட்டு
மண்டபத்தில் இந்தக் கருத்துக் கோரல்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக அந்த
ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான எழுத்து மூலக் கருத்துக் கோரல்கள் நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளன.