மட்டக்களப்பு முழுமதி சகவாழ்வுச் சங்கத்தினால் நீலன் திருச்செல்வம் நிதியத்தின் நிதி பங்களிப்பில் முன்பள்ளி சிறார்களுக்கான போசாக்கு உணவு வழங்கும் திட்ட ஆரம்ப நிகழ்வு.

 




 




















 FREELANCER

 

 மண்முனை  வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 12   முன்பள்ளிகளில் கல்வி பயிலும் 300 சிறார்களுக்கான போசாக்கு  உணவு வழங்கும்  திட்டத்தின் தெளிவூட்டல் ஆரம்ப நிகழ்வானது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர்  திரு வி. வாசுதேவன் அவர்களின் தலைமையில், மண்முனை வடக்கு பிரதேச செயலக   கேட்போர் கூடத்தில் 02.07.2024 அன்று பி.ப. 3.30 மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி சார்பாக சிரேஸ்ட பொதுச்சுகாதரா மேற்பார்வையாளர் திருமதி கே. சிவவரதன், முன்பள்ளி  அபிவிருத்தி   உத்தியோகத்தர் திரு தி. மேகராஜ், தேசிய ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்பு அலுவலர்  திரு என். துஜோகாந்த்,  முழுமதி சகவாழ்வுச் சங்கத்தின் தலைவர் திரு எஸ். முகுந்தன்,   திட்ட முகாமையாளர்  திரு வீ.குகதாசன், முழுமதி சகவாழ்வுச் சங்கத்தின்   உத்தியோகத்தர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் எனப்பலரும்  கலந்து கொண்டனர்.

தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார நெருக்கடி, தொடர்ந்து வந்த அசாதாரண  நிலைமையினைக் கடந்து வந்த மக்கள் இன்னும் அதன் சுமையை முகாமை   செய்வதிலும் தமது பிள்ளைகளுக்கான போதிய, போசாக்கான உணவு வழங்குவதிலும்   உள்ள இடர்பாடுகளை ஓரளவு  சீர் செய்யும் வகையிலும், முன்பள்ளி சிறார்கள்    எதிர்நோக்கும் விருத்தி, வளர்ச்சி சவால்களை வெற்றி கொள்ளும் வகையிலும்    இவ்வாறான திட்டம் முன்னெடுக்கப்படகின்றமை வரவேற்கப்படுகின்றது எனவும், அத்துடன்   இயற்கைமுறை உணவுகளையும் சமூக மட்டங்களில் கிடைக்க கூடிய சத்தானதும்,   நம்பகமானதுமான உணவுகளை உரிய சுகாதரா முறைப்படி சமைத்து வழங்குவதற்கான  ஏற்பாடுகளை முன்பள்ளி ஆசிரியர்கள் கவனத்தில் கொண்டு செயற்படுத்த வேண்டும்   எனவும் தொடர்ந்து திட்டத்திற்கான உணவு வழங்கலை எதிர்வரும 08.07.2024 முதல்   வழங்கி வைக்க முடியும் எனவும் அதன் திட்ட முகாமையாளர் தெரிவித்தார். 

மேலும் உள்ளுர் மட்டங்களில்  சுயதொழில் ஒன்றை மேற்கொள்ளும் வருமானம் ஈட்டக்கூடிய உள்ளுர் உற்பத்தியாளர்களிடம் கொள்வனவைச் செய்வதன் மூலம் இயற்கை உணவுகளை பெற்றுக் கொள்ளும் அதேவேளை அவர்களையும் மேம்படுத்த முடியும்  என்பதோடு சமூகத்தின் பங்களிப்பையும் இதன்பால் பெற்றுக் கொண்டு எதிர்பார்த்த  இலக்கை இந்த திட்டத்தின் மூலம் அடைய முடியும் என பிரதேச செயலாளர்  அவர்களும்,   சமூகம் தந்திருந்த அரச பிரதி நிதிகளும் திட்ட அலுவலர்களும் குறிப்பிட்டிருந்தனர், அத்தோடு சிறியதொரு நிறுவனமாக இருந்த கிராம மட்ட நிறுவனம் இவ்வாறானதொரு  நிதியீட்டைப் பிரதேச மட்டத்திற்கு கொண்டுவந்ததை இட்டு பிரதேச செயலாளர்,  முழுமதி   சகவாழ்வுச் சங்க தலைவர் திரு எஸ்.முகந்தன் மற்றும் அணியினரை பாராட்டியதுடன்   நிதி வழங்குனரான நீலன் திருச் செல்வம் நிதியத்திற்கும் தனது நன்றிகளையும்,  பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.