(கல்லடி செய்தியாளர்)
மட்டக்களப்பு கல்லடி புதுமுகத்துவாரம் புனித இஞ்ஞாசியார் பேர் கொண்ட தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற திருவிழா இன்று புதன்கிழமை (31) புதுமுகத்துவாரம் புனித இக்னேசியஸ் வித்தியாலயத்துக்கு முன்பாக அமைந்துள்ள புனிதருடைய இஞ்ஞாசியார் சொரூபத்தில் இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் பி.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,கல்லடி டச்பார் இஞ்ஞாசியார் ஆலய பங்குத் தந்தை லோரன்ஸ் அடிகளார்,பங்குத் தந்தை ஜோசப்மேரி அடிகளார்,அருட்பணி பிறைன் செலர் அடிகளார் ஆகியோர்0 இணைந்து செப வழிபாட்டினை மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் மற்றும் கிராம வாசிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் இறுதியில் கலந்து கொண்டோருக்குப் பொங்கல் பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.