ஜனாதிபதி யின் பதவி நீடிக்கப்படாவிட்டாலும் இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் ரணிலை ஆதரிக்க தீர்மானித்துள்ளனர்- விநாயகமூர்த்தி முரளிதரன்


 

 




















 வரதன்

 

ஜனாதிபதியின் பதவிக்காலத்தினை நீடிப்பதற்கு அரசியல் யாப்பில் உள்ள விடயத்தினை ஜனாதிபதி கோரியிருப்பதானது சிறந்த விடயமாக பார்ப்பதாகவும் இந்த நாட்டில் வரிசை யுகம் இருந்தபோது அதனை குறுகிய காலத்தில் வழமைக்கு கொண்டுவந்த ஒரு திறமையானவராக இன்றை ஜனாதிபதியை பார்க்கவேண்டும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அவ்வாறு ஒரு தேர்தல் நடைபெற்றாலும் வடகிழக்கில் உள்ள தமிழ் -முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே வாக்களிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற நிகழ்வில் ஊடகவியலாளர்கள் எழுக்கிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.ஜனாதிபதி யின் தனிப்பட்ட திறமையினை பாராட்டவேண்டும்,

அவரினால்தான் இன்று சர்வதேச சமூகம் பல உதவிகளை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி யின் பதவி நீடிக்கப் படாவிட்டாலும் இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் ரணில் அவர்களையே ஆதரிக்க தீர்மானித்துள்ளதாகவும் முரளிதரன் தெரிவித்தர்.