"மணல் வீதியற்ற கிராமங்கள்" எனும் வேலை திட்டத்தின் கீழ் நெடிய மடு உள்ளக வீதியை ராஜாங்க அமைச்சர் சிவனேசத்துறை சந்திரகாந்தன் திறந்து வைத்தார்

 

 


 








 வரதன் 


கிராமிய வீதிகள் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கிராமிய வீதிகள் ராஜாங்க அமைச்சினால் "மணல் வீதியற்ற கிராமங்கள்" எனும் வேலை திட்டத்தின் கீழ் நெடிய மடு உள்ளக வீதியானது மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கும் நிகழ்வு


அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூர் மேம்பாட்டு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உலக வங்கியின் நிதி உதவியுடன் 5 மில்லியன் ரூபா செலவில் மண்முனை  மேற்கு  பிரதேசத்தில்  அமைக்கப்பட நெடிய மடு உள்ளக வீதியானது மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கும்  நிகழ்வு இன்று  மண்முனை  மேற்கு  பிரதேச  செயலகப்பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ் சபேசன் தலைமையில் இடம் பெற்றது


கிராமிய வீதிகள் ராஜாங்க அமைச்சினால் மணல் வீதியற்ற கிராமங்கள் எனும் வேலை திட்டத்தின் கீழ் நெடிய மடு உள்ளக வீதியானது மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக ராஜாங்க அமைச்சர் சிவனேசத்துறை சந்திரகாந்தன் கலந்துகொண்டு மக்கள் பாவனைக்காக திறந்து வைத்தர்

 மண்முனை  மேற்கு பிரதேச  செயலாளர் திருமதி சத்யானந்தனி நமசிவாயம் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் மண்முனை  மேற்கு  பிரதேச  செயலக ஊழியர்கள் பொதுமக்கள்  மற்றும் அரச உயர் அதிகாரிகள்  நிகழ்வில் கலந்து கொண்டனர்


இங்கு உரையாற்றிய ராஜாங்க அமைச்சர்.-மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேச மக்களின் அடிப்படைகளை நிவர்த்தி செய்யும் போது கிராமத்தில் உள்ள மக்கள் விரைவாக கல்வி சுகாதாரம் விவசாயம் வாழ்வாதாரத் அபிவிருத்தி திட்டங்களை  முன்னெடுப்பதற்கு இவ்வாறான கிராமிய வீதிகள் அமைக்கப்பட வேண்டியது முக்கியமானதாகும் என இங்கு கருத்து தெரிவித்தார்


இந்த கிரவல் வீதி கடந்த கால வெள்ள அனத்தங்களின் போது பாதிக்கப்பட்டிருந்ததை ராஜாங்க அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து கிராமிய வீதிகள் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பின்தங்கிய பிரதேச மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்யும் முகமாக இந்த கிரவல் வீதி திறந்து வைக்கப்பட்டது