மட்டக்களப்பு அம்பிளாந்துறை - குருக்கள்மடம் பாதைப்படகில் பயணிக்கும் பயணிகளின் உயிராபத்தான நிலைமையை அரசாங்கம் கருத்தில் கொள்ளாதது ஏன் ? மக்கள் விசனம் .

 



 

 

















மட்டக்களப்பு   அம்பிளாந்துறை கிராமத்தையும்  குருக்கள்மடம் கிராமத்தையும் இணைக்கும் பிரதான போக்குவரத்து மார்க்கமாக   பயன் படுத்தப்படும் பாதைப்படகு   பாவனைக்கு உதவாத  நிலையில் உள்ளது     
எந்த நேரத்திலும்  படகு நீரில் அமிழ்ந்து விடும் ஒரு சூழ் நிலையில் உள்ளது .
இப்போக்குவரத்து மார்க்கத்தினூடாக விவசாயிகள், ஆசிரியர்கள், அரச, மற்றும் அரச சார்பற்ற ஊழியர்கள், வியாபாரிகள் பொது மக்கள் எனப்பலரும் பயணம் செய்து வருகின்றனர்.
பயணிகள் மிகப்பெரும் அச்சத்துடன் , தினமும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணிப்பதாக தெரிவிக்கப்படுகிறது
இப்படியான அபாயகரமான படுகுச்சேவை இலங்கையின் எந்தப்பாகத்திலும் இல்லையென பயணிகள் பேசிக்கொள்வதை கேட்கக்கூடியதாக உள்ளது.
பொறுப்பு கூறவல்ல  அரசாங்க அதிகாரிகள் தாமதிக்காமல்  அரசாங்கத்தின் கவனத்துக்கு இப் பிரச்சினையை  கொண்டு சென்று     புதிய பாதையை பெற்று கொடுத்து  பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வேண்டுகோள் விடுகின்றனர் .