நாட்டில் போக்குவரத்து சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது சட்ட விரோதமானதாகும் எனவே பணிக்கு சமூகமளிக்காத ஊழியர்களுக்கு எதிராக ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலர் ரஞ்சித் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக இன்று (10) புகையிரத சீசன் பயணச்சீட்டு வைத்திருக்கும் பயணிகள் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் சீசன் பயணச்சீட்டை போக்குவரத்துக்கு பயன்படுத்துவதற்கு தேவையான வசதிகளை போக்குவரத்து அமைச்சு வழங்கியுள்ளது.