கடும் நெரிசலால் ரயில் பயணி ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்

 

 


 கொழும்பு புறக்கோட்டையில் இருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த ரயிலில் இருந்து பயணி ஒருவர்  நேற்று மாலை  தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக  நேற்று   காலையும் மாலையும் சில ரயில் சேவைகளே முன்னெடுக்கப்பட்டன. அவற்றில் பெருமளவான பயணிகள் கடும் நெரிசலுக்கு மத்தியில் பயணித்து வரும் நிலையிலேயே இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.