கல்முனை இலங்கை மின்சார சபை ஊழியர்களும் போராட்டத்தில் குதித்தனர் .

 


இலங்கை மின்சார சபை (CEB) ஊழியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டமானது நேற்று (9) இலங்கை மின்சார சபையின் கல்முனை தலைமை அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் 2024 ஆண்டிற்கான சம்பள உயர்வை உடனடியாக வழங்கு, சம்பள முரண்பாட்டு தீர்வை உடனடியாக வழங்கு , வேலை நீக்கம் செய்த 62 தொழிலாளர்களை உடனடியாக சேவையில் இணைத்துக் கொள், என பல்வேறு வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து அமைதி வழி ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

 இதன் போது, சுமார் 50க்கும் அதிகமான உத்தியோகத்தர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில்  பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.