freelancer
காத்தான்குடியிலிருந்து ஆரையம்பதி நோக்கி சென்று கொண்டிருந்த போது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. முச்சக்கர வண்டி சாரதிக்கு திடீரென்று ஏற்பட்ட நெஞ்சுவலியால் சாரதியின் கட்டுப்பாட்டினை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலும் விபத்தில் காயமடைந்தவர் காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த( 60) வயதுடைய நபராவார் விபத்துக்குள்ளான நபர் ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு அதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலீசார் முன்னெடுத்து வருகின்றனர்..