துருக்கிய கடற்படையின் டி.சி.ஜி கினாலியாடா கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
152 மாலுமிகளைக் கொண்ட இந்தக் கப்பலின் கட்டளை அதிகாரியாக செர்கன் டோகன் (serkan dogan)என்பவர் கடமையாற்றுகிறார்.
இந்த நிலையில், டோகனுக்கும் மேற்கு கடற்படை
கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சமன் பெரேராவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ
சந்திப்பொன்றும் இங்கு இடம்பெற்றுள்ளது.
குறித்த சுப்பல் இலங்கையில் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை நங்கூரம்
இடப்படும் என்றும், அதன் மாலுமிகள் நாட்டின் முக்கிய இடங்களைப் பார்வையிட
பல பகுதிகளுக்குச் செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான சுடற்பரப்பில் இலங்கை
கடற்படை கப்பலுடன் கடற்படை பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக கடற்படையினர்
அறிவித்துள்ளனர்.