(மட்டக்களப்பு நிருபர்)
நீர்ப்பாசனத் திணைக்கள வேலைகள் மேற்பார்வையாளராகவும் பதில் அபிவிருத்தி உத்தியோகத்தராகவும் பணியாற்றி ஓய்வு பெற்ற கலாபூஷணம் இராசையா கிருஷ்ணபிள்ளை,நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு விவகார அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்சவினால் வழங்கப்பட்ட நியமனத்திற்கமைவாக மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எச்.எம்.முகம்மது பசீல் முன்னிலையில் தீவு முழுவதுக்குமான சமாதான நீதவானாக அண்மையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
ஆரையம்பதியைச் சேர்ந்த சீனிப்பிள்ளை- இராசையா தம்பதிகளின் புதல்வரான இவர்,தனது ஆரம்பக் கல்வியை மட்டக்களப்பு ஆரையம்பதி நொத்தாரிஸ் தமிழ் கலவன் பாடசாலையிலும் இடைநிலை மற்றும் உயர் கல்வியை திருகோணமலை கந்தளாய் கோயில்கம அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மற்றும் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையிலும் கற்றமை குறிப்பிடத்தக்கது.