ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் புதிய போராட்டமொன்றின் தோற்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சில தரப்பினரால் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களில் எவ்வித அடிப்படையும் இல்லை என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கேள்வி – இலங்கையில் சிலர் எதிர்பார்த்த தேர்தல் முடிவுகள் கிடைக்காவிட்டால் இலங்கையில் இரண்டாவது போராட்டம் ஏற்படலாம் என தெரிவித்துள்ளனர். மீண்டும் அவ்வாறானதொன்று நிகழாமல் தடுப்பதற்கு இலங்கை பாதுகாப்புப் படையினர் அதிக உந்துதல் பெற்றுள்ளதா?
“அப்போது ஏற்பட்ட நிலைமை மிகவும் திடீர் நிலைமை. ஆனால் எல்லாவற்றையும் ஆய்வு செய்து ஏன் இப்படி நடந்தது? எப்படி நடந்தது? இதற்கு யார் பொறுப்பு என்பதை கண்டறிந்து தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். எனவே அப்படியொரு நிலை ஏற்படும் என்று நினைக்க வேண்டாம், அப்போதும் அவர்களால் நிலைமையை கட்டுப்படுத்த முடிந்தது.