இலங்கையில் சிறுவர் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது .

 

 


கடந்த 2023ஆம் ஆண்டில் 9,436 சிறுவர் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரி கீத் பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

இணையவழி பாதுகாப்பு தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்காக காலியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதிகளவான சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ளன.

அதன்படி, கொழும்பு மாவட்டத்திலிருந்து 1,124 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களும், கம்பஹா மாவட்டத்திலிருந்து 907 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களும், களுத்துறை மாவட்டத்திலிருந்து 548 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களும் பதிவாகியுள்ளன.

மேலும், குருணாகல் மாவட்டத்திலிருந்து 760 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களும், இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து 598 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களும்,  காலி மாவட்டத்திலிருந்து 541 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களும் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், கடந்த ஆண்டில் 53 சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளனர். 125 சிறுவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ளமை பதிவாகியுள்ளது.

இதேவேளை, சிறுவர் திருமணங்கள்,சிறுவர் வன்முறைகள் மற்றும் சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துதல் உள்ளிட்ட 1,714 சிறுவர்கள் தொடர்பான குற்றங்கள் பதிவாகியுள்ளன.

மேலும், நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிடுவதாகக் கூறி பணம் பெறுதல், உடலுறவில் ஈடுபட்ட காட்சிகளைக் காணொளிகளாக எடுத்து அச்சுறுத்துதல் , சமூக ஊடகங்களின் மூலம் தொடர்பு கொண்டு அச்சுறுத்தி பல்வேறு தேவைகளை நிறைவேற்றுதல் ஆகிய குற்றங்கள் அதிகரித்துள்ளன.