இந்துக் குருமார் அமைப்பு இரா. சம்பந்தன் அவர்களின் மறைவுக்காக இரங்கல் தெரிவித்துக்கொண்டது .





எமது தமிழினம் ஓர் பெரும் பலத்தினை இழந்த சூழலில் உள்ளது. சுமார் ஆறு தசாப்தங்களாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினராக விளங்கித் ஆற்றல்மிகு சக்தியாக தமிழ் மக்கள் மத்தியில் விளங்கிய ஓர் பண்புமிக்க அறிவாளனை இழந்துள்ளோம். இராஜதந்திர நகர்வுகளை செய்யும் சிறப்பாளர். பல்வேறு நாட்டு தலைவர்களாலும் இராஜதந்திரிகளாலும் மதிக்கப்பட்டவர். எமது தமிழ் பிரதிநிதிகளை ஓர் அணியாக செயற்பட வேண்டும் என செயற்பட்டவர். நிதானமாக நுண்ணறிவுடன் செயலாற்றிய, தலைமை தாங்கிய தலைவரை இழந்துள்ளோம்.
இச்சமயத்தில் இரா. சம்பந்தன் அவர்களின்  ஆத்ம சிவப்பிராப்திக்கு இந்துக் குருமார் அமைப்பின் சார்பில் இறை பிரார்த்தனை செய்கிறோம்.
ஓம் சாந்தி.

கலாநிதி. சிவஸ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்கள்.
தலைவர் இந்துக் குருமார் அமைப்பு.

சிவஸ்ரீ. ச. சாந்தரூப குருக்கள்.
செயலாளர், இந்துக் குருமார் அமைப்பு.