(மட்டக்களப்பு நிருபர்)
கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கண்ணகையம்மன் ஆலயங்களுள் ஒன்றான திருப்பழுகாமம் கண்ணகையம்மன் ஆலய மகாகும்பாபிஷேக குடமுழுக்கு பெருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) காலை 05.56 மணி தொடக்கம் 06.48 மணி வரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் பரிபாலன தெய்வங்களான கண்ணகையம்மன் மற்றும் வைரவர் தெய்வங்களுக்கும் பக்த அடியார்கள் புடைசூழ, வேதபாராயணங்கள் முழங்க நிகழ்த்தப்பட்டது.
இக் குடமுழுக்குப் பெருவிழாவினை பிரதிஷ்டா பிரதமகுரு சிவஸ்ரீ சு.கு.விநாயகமூர்த்திக் குருக்கள் தலைமையில் ஆலய நம்பியார் சிவஸ்ரீ க. சுந்தரம்,சிவஸ்ரீ ந.கு.பத்மநிலோஜஈசான சிவம்,வி.கு.சிஷ்யமேனன்சர்மா ஆகியோர் நிகழ்த்தி வைத்தனர்.
இப் பெருவிழாவினைக் காண மட்டக்களப்பு மாவட்டத்தின் நாலாபக்கமும் இருந்து பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் வருகை தந்திருந்ததைக் காண முடிந்தது.
இதனைத் தொடர்ந்து 12 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்று,,எதிர்வரும் 18 ஆம் திகதி வியாழக்கிழமை பாற்குடப்பவனியும் சங்காபிஷேகமும் இடம்பெறவுள்ளதாக இந்து கலாமன்றத் தலைவர் வ.பரமலிங்கம் தெரிவித்தார்.