(கல்லடி செய்தியாளர்)
மட்டக்களப்பு புதுமுகத்துவாரம் புனித இக்னேசியஸ் வித்தியாலய ஆரம்பப்பிரிவு மாணவர்களின் சந்தை நிகழ்வு வித்தியாலய அதிபர் பி.தங்கவேல் தலைமையில் இன்று திங்கட்கிழமை (29) வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இதன்போது மாணவர்களினால் பல்வேறு வகையான காய்கறிகள்,இலக்கறி வகைகள் மற்றும் தின்பண்டங்கள் உட்படப் பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.
இதில் கலந்து கொண்ட மாணவர்கள் பொருட்களைக் கூவி விற்றதோடு,கொடுக்கல் வாங்கல் செய்ததையும் காண முடிந்தது.